ஆண்
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மொளனம்
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மொளனம்
வேறெதிலே உந்தன் கவனம் வேறெதிலே... உந்தன் கவனம்
வேறெதிலே உந்தன் கவனம் வேறெதிலே. உந்தன் கவனம்
பெண்
இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும் இதயமிலாதார் கவனம்
இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும் இதயமிலாதார் கவனம்
ஏன் எதனால் இந்த மொளனம் ஏன் எதனால் இந்த மொளனம்
ஏன் எதனால் இந்த மொளனம் ஏன் எதனால் இந்த மொளனம்
ஆண்
வண்ணச் சிலையே.... .. வண்ணச் சிலையே வளர்பிறையே வந்ததறியேன் மனக்குறையே
வண்ணச் சிலையே வளர்பிறையே வந்ததறியேன் மனக்குறையே
வண்ணச் சிலையே வளர்பிறையே வந்ததறியேன் மனக்குறையே
பெண்
எண்ணம் வேம்பு மொழிக் கரும்பு எண்ணம் வேம்பு மொழிக் கரும்பு
எனை பிரிந்த உம் மனம் இரும்பு
எனை பிரிந்த உம் மனம் இரும்பு
ஆண்
கண்ணே போதும் சொல் அம்பு அ...ஆ..
கண்ணே போதும் சொல் அம்பு
உனை கணமும் பிரியேன் எனை நம்பு
பெண்
உண்மையில் என்மேல் உமக்கன்பு
அ...ஆ..
உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால் இல்லை இனிவம்பு
உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால் இல்லை இனிவம்பு
ஆண்
கண்ணில் தவளுதே குறும்பு
அ...ஆ..
கண்ணில் தவளுதே குறும்பு
கனிமொழியே நீ எனை விரும்பு.
கண்ணில் தவளுதே குறும்பு
கனிமொழியே நீ எனை விரும்பு.
ஆண் பெண்
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே கனிவுறும் காதல் ஜோதி
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே கனிவுறும் காதல் ஜோதி
காண்போமே பாதி பாதி காண்போமே பாதி பாதி
காண்போமே பாதி பாதி காண்போமே பாதி பாதி
|