|
| | | | வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. | 11. | | | | |
|
| | | | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | 12. | | | | |
|
| | | | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | 13. | | | | |
|
| | | | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | 14. | | | | |
|
| | | | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | 15. | | | | |
|
| | | | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | 16. | | | | |
|
| | | | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | 17. | | | | |
|
| | | | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | 18. | | | | |
|
| | | | தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். | 19. | | | | |
|
| | | | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | 20. | | | | |
|