| | | | பாயிரவியல் | கடவுள் வாழ்த்து | | | | |
|
| | | | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | 1. | | | | |
|
| | | | கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின். | 2. | | | | |
|
| | | | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | 3. | | | | |
|
| | | | வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | 4. | | | | |
|
| | | | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | 5. | | | | |
|
| | | | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | 6. | | | | |
|
| | | | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | 7. | | | | |
|
| | | | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | 8. | | | | |
|
| | | | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | 9. | | | | |
|
| | | | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | 10. | | | | |
|