அன்புடையீர் வணக்கம்...

முதல் வணக்கம் 


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
.

குவளை ஓர் அறிமுகம்:

குவளை என்ற இந்த இணைய தளத்தின் வழியாக அனைவரையும் சந்திப்பதில் உவகை அடைகிறேன். குவளை என்பது ஒருவகை பூ. இந்த மலரைப் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் அறியப்படுகிறது. அழகிய கண்களுக்கு உவமை கூறும் புலவர்கள், இந்த மலரை குறிப்பார்கள். குவலையம் என்பது இந்த வையகத்தை குறிக்கும். இணைய தளத்திற்கு பெயர் சூட்ட எண்ணிக்கொண்டிருந்த போது பட்டர் அருளிய அபிராமி அந்தாதியில் வரும்

புண்ணியம் செய்தனமே மனமே - புதுப் பூங் குவளைக்... ( அந்தாதி - 41)

என்ற அடியில் வரும் குவளை என்ற சொல் மனதில் பதிந்தது. அதனையே இணைய தளத்தின் முகவரியாக அமைத்தேன்.

இந்த முயற்சி கணினி துறையில் நமது செந்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சியினை உலகோர் அறிய ஒரு நுழைவாயிலாக அமையும் என நம்புகின்றேன். ஒருபுறம் மின்ணணுவியல் துறை மொழியின் வளர்சிக்கு உதவியாக இருந்தாலும் மற்றொருபுறம் கலாச்சாரக் கலப்பினால் மொழிகள் தனித்தன்மையை இழந்து வருகின்றன. அதில் தமிழ் மொழியும் விதிவிலக்கு அல்ல. வியாபார நோக்குடன் வந்திருக்கும் தனியார் தொலைக்காட்சிகளும் வானொலி நிலையங்களும் இன்று மொழியை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் தனிப்பட்ட முயற்சியாக இந்த இணைய தளத்தினை உங்கள் பார்வைக்கு அளிக்கின்றேன். இதில் காணப்படும் குற்றங்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.


@ மின்னஞ்சல்@குவளை.காம் இளங்கோவன் கணேசன்